Sunday, 16 June 2013



நன்றி.
      அறநெறிப்பாடசாலையின் கணணி  நிலையமானது எதிர்கால சந்ததியின் தேவைகளையுணர்ந்த நம்மவர்களின் உதவியோடு அறநெறிப்பாடசாலையின் நிர்வாகத்தினரால் நிர்வகிக்கப்படுவதாகும்.
அறநெறிப்பாடசாலையின் கணணி வகுப்புகள் நடைபெறுகின்ற வீட்டிற்கு அங்கு பிறந்து வளர்ந்த, கணணி வகுப்பை ஆரம்பித்தவரின் ஞாபகார்த்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அறநெறிப்பாடசாலையின் கணணி நிலையத்தின் அடிப்படைத்தேவைகளான
14 கணணிகளை அன்பளிப்புச்செய்த காலஞ்சென்ற திருமதி.சிறிவேணி தயாளன்,
1 கணணியை திருமதி. கோகிலாம்பாள் பாலசிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக அன்பளிப்புச்செய்த அவரது குடுப்பத்தினர் ,
10 கணணி மேசைகளை அன்பளிப்புச்செய்த திரு.நீதன் குணானந்தன் மற்றும் கணணி வகுப்புக்கான Multimedia Projector ஒன்றை அன்பளிப்புச்செய்த Master திரு.ஜேம்ஸ் கந்தசாமி ஆகியோருக்கும் மற்றும் தொடர்ந்து கண்ணியமான புரிதலோடு உதவுகின்ற உறவுகள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி கூறிக்கொள்கிறோம்.
அறநெறிப் பாடசாலை .
திரு.மா.ஹரிகரன்.June 15.2013.

No comments:

Post a Comment