சரணகோசம்.
பாடுவோம் ஆடுவோம் ஐயன் புகழ் பாடுவோம்
நாடுவோம் ஓடுவோம் ஐயன் பாதமலர் நா
ஓம் வந்ததே வந்தது காரத்திகை வந்ததே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் பாரு பாரு ஒன்றாம் தேதியைப் பாரு சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் நாடு நாடு குருசாமியை நாடு சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் போடு போடு ஐயப்பன் மாலை போடு சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் ஏற்று ஏற்று ஐயனுக்கே நெய்தீபம் ஏற்று சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் ஓது ஓது ஐயப்பன் நாமம் ஓது சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் செய்திடு செய்திடு ஐயப்பன் பூசை செய்திடு சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் பாடு பாடு ஐயப்பன் சரணகோசம் பாடு சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் நினைத்துப்பாரு ஐயன் உருவம் பாரு சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் கொடுத்திடு அன்னதானம் கொடுத்திடு சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் கட்டு கட்டு ஐயனுக்கே இருமுடி கட்டு சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் நிரப்பு நிரப்பு ஐயனுக்கே நெய்யை நிரப்பு சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் புறப்படு புறப்படு ஐயன் மலைக்கே புறப்படு சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் ஓடிப்பாடு நடந்துபாடு ஐயப்பன் நாமம் பாடு சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் நின்று பாடு கல்லையும் முள்ளையும் தாண்டிப்பாடு சுவாமி
சரணம் ஐயப்பா
ஓம் ஓதுவோம் சுவாமி சரணகோசம் ஓதுவோம் சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் சபரிமலை அதிபதியே ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் ஹரிகரனார் குமரனே ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் மோகனப் பெருமாள் ஐயனாரே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் ஏழைக்கடியோனே ஐயனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் அபலைக்கு அபயம் தருவோனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் ஆரியங்காவு ஐயப்பனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் அச்சன் கோவில் மன்னவனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் விக்கினம் அழித்திடும் தர்ம சாத்தாவே சுவாமி சரணம்
ஐயப்பா
எரிமேலி வீற்று அடியார்க்கருளும் ஐயனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் கூத்துமாடி தொழுகின்றோம் சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் பாபர் நட்பின் குருவே ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் அழுதா நதியில் நீராடி இறஞ்சுகின்றோம் சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் அழுதா நதியில் கல்லெடத்து வருவோம் சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் குன்றத்திலே கல்லிட்டு புகழ் பாடி வருவோம் சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் கரியனாம் தொட்டே நடந்திடுவோம் சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் இஞ்சிப்பாறைதனை தாண்டி வந்தோம் சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் சிறியாண வட்டம் கண்டுவந்தோம் சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் பந்தள மன்னன் வாரிசே ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் மன்னவன் மார்பில் தவழ்ந்த பாலகனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் ஈராறு ஆண்டுகள் மகிழ்வித்த வித்தகனே சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் சிவிலித்hதயார் துயர் களைந்த மைந்தனே சுவாமி சரணம்
ஐயப்பா
அம்பு பாயுமிடமே தஞ்சமென வகுத்தோனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் மலைதனில் அமர்ந்த ஐயப்பனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் மகரிசியை வதம் செய்து காத்த வீரனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் இந்திராணிக்கே அபயம் அளித்த தீரனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் மஞ்சள் மாதாவினை கன்னியாகக் கணித்தவனே சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் வேங்கை மீதமர்ந்த காக்கும் காவலனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் அடியாரை ஆழுமை புரியும் மன்னவனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் பெருவழி காட்டி அடியாரை அரவணைத்தோனே சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் நொண்டியை மலையேற அருள் சுரந்தோனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் மணிகண்டன்
ரூபத்தில் வழித்துணையாக வருவோனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் ஐம்புலன்களை அடக்கிட நோன்பினை வகுத்தோனே சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் பம்பா ஒளிச்சுடரே ஐயப்பனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் கணபதி பகவான் சோதரனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் புலிப்பால் கொணர்ந்த தர்மசீலனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் வீராதி வீர மணிகண்ட பிரபுவே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் நீலி மலை தாண்டிவந்தோம் சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் அப்பாச்சி மேடேறி வந்தோம் சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் இப்பாச்சி குழியைக் கடந்து வந்தோம் சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் கரம் கத்திதனில் உன் நாமம் ஒதி வந்தோம் சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் சத்ய மாய பதினெட்டாம்
படிக்கதிபதியே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் கலியுகம் தனில் அவதரித்த ஐயப்பனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் பம்பா நதி நீராடி வந்தோம் சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் சிதறடித்தோம் தேங்காயை கணபதி வாசலிலே சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் உந்தன் மலை ஏறி வந்தோம் சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் குருசாமிமுன் தாழ் பணிந்தே வந்தோம் சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் பதினெட்டாம் படி பூசையினை தரிசித்து வந்தோம் சுவாமி
சரணம் ஐயப்பா
ஓம் கன்னி மாதாவை தாழ்பணிந்தே வணங்கி வந்தோம் சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் கன்னிமூல கணபதியை தொழுது வந்தோம் சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் மயிலேறும் முருகனை வணங்கி வந்தோம் சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் உன் ஆலய வாசலிலே தினம் தினம் சரணைந்தோம் சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் இருமுடி தரித்த கன்னி சுவாமிக்கே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் அடியார் புடைசூழ்ந்தே வந்திடுவர் உன்னடிக்கே சுவாமி
சரணம் ஐயப்பா
ஓம் தஞ்சமெனக் கோருவோர்க்கு அடைக்கலம் தருவாயே சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் சரணகோசம் அதிரும் மலை யைன் மலை சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் ஐயப்பன் மனவழி சரணடைந்தோம் சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் ஐயன் மலைமீதே தவழ்ந்து வரும் காற்றே சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் ஐயன் மேனியில் ஒளிரும் கதிரவனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் ஐயன் பாதம்தனை தழுவிடும் பம்பா நதியே சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் ஐயன் அவதரித்த பந்தள மண்ணே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் ஐயன் நாமம் அதிரும் வான் வெளியே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் அகிலத்தைக் காத்தருளும் நாயகனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் நெய் அபிஷேகப் பிரியனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் பஞ்சாமிர்தப்
பிரியனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் தேனாமிர்த அபிஷேகப்பிரியனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் சந்தன அபிஷேகப்பிரியனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் பால் தயிர் அபிஷேகப் பிரியனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் காந்தமலை ஜோதி ரூபனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் மகர ஜோதியாக ஒளிரும் நாயகனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் எங்கும் பரந்த ஒளிச்சுடரே ஐயனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் தங்க வைர ஆபரணம் அணிந்தோனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் துளசி மாலைப் பிரியனே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் மலர் மாலைகள் அலங்கரிக்கும் மெய்யனே சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் கற்பூர ஒளியினில் காட்சி தரும் ஐயனே சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் தூயமலர் சொரிந்த பாத மலர் கண்டோம் சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் பறை ஓசை முழங்கிட மலைகள் அதிருமே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் ஜோதி சுடரொளி கருடனும் வணங்குமே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் அடியார்க்கு உன்பாதம் எக்காலும் தஞ்சமையா சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் உள்ளன்போடு வேண்டுவோருக்கு வரம் தருவோனே சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் சபரிமலை வீற்று ஒளிபரப்பும் ஐயப்பனே சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் அடியார் உளம்புகுந்த கருணைக் கடலே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் சிரசே நீ தாழ்ந்து வணங்குவீரே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் கண்களே ஐயன் காட்சி காண்பாயே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் செவிகள் ஐயன் புகழ் கேட்பாயே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் நாசியே ஐயன் அருள் மணம் முகர்வாயே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் நாவே ஐயப்பன் நாமம் ஓதிடுவாயே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் அகமே ஐயனைத் தினம் பூசிப்பாயே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் இதயமே ஐயன் எளில் ரூபம் உணர்வாயே சுவாமி சரணம்
ஐயப்பா
ஓம் கரங்களே ஐயப்பனை தொழுதிடவீரே சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் பாதமே கல்லும் முள்ளும் கடந்து ஐயனடி சேர்வாயே சுவாமி
சரணம் ஐயப்பா
ஓம் உடம்பே நீ ஐயப்பன் தாழ் பணிவாயே சுவாமி சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா.
No comments:
Post a Comment