Monday, 13 January 2014

தைத்திருநாள்.
நாநிலம் போற்றும் தை மகளே வருக வருக!
ஆனந்தப்பொங்கலிடுவோம் வா மகளே.
நிலமகளே உன் கொடை பெரிதினும் பெரிதன்றோ.
காளைகளே உங்கள் தியாகம் உழவனுக்கு உயர்வன்றோ.
நெல் மணிகளுடன் கரும்பும் வாழை மா பலா மஞ்சளுடன் அலங்கரித்தே நெய் தேனுடன்
பச்சையரிசிப் பொங்கலிட்டு
ஆதவன் முதற்றே அர்ப்பணித்து
தாழ் பணிகின்றோம் தை மகளே.
நிலமகளே
காத்தருள்வாய் தாயே. 
த.நாராயணன்.

No comments:

Post a Comment