வாயிலே
மண்
இதெல்லாம் மனுசன் செய்கிற காரியமா? என்று நீங்கள் கேட்கலாம். சந்தேகமில்லை. நிச்சயமாக இதை மனிதர்கள்தான் செய்கிறார்கள்.
கடந்த வாரம் வன்னியில் உள்ள ஒரு கடலோரக் கிராமத்தில் மீன்பிடித் தொழிலை ஊக்குவிப்பதற்காக சிறிய படகுகளையும் வலைகளையும் இன்னும் சில மீன்பிடி உபகரணங்களையும் ஒரு தொண்டு நிறுவனம் உதவியாக வழங்கியிருக்கிறது.
பதிவு செய்யப்பட்ட ஒரு மீனவருக்கு ஒரு தொகுதி பொருட்கள். சுமார் எண்பது ஆயிரம் ரூபாய் பெறுமதியானவை என்;று அங்கே சொல்லப்பட்டது. இப்படி 60 பயனாளிகள் அதைப் பெற்றிருக்கிறார்கள்.
கடற்றொழிலை மேம்படுத்தவும் அந்தத் தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்களுக்கு உதவவும் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவுமே இந்த உதவிகள்.
ஆனால், இந்த உதவியைப் பெறுவோரின் முகங்களிலே மலர்ச்சியும் இல்லை. மகிழ்ச்சியும் இல்லை.
பொருட்களை வாங்கும்போது வாடிச் சோர்ந்த முகங்களுடன்தான் கைகளை நீட்டினார்கள். கூட்டத்தில் தங்களுக்குள் இரைச்சலாகச் சத்தமிட்டுக் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
'என்ன, ஏது என்று கேட்டால்.....!'
'வாங்கப்பட்ட வள்ளங்கள் தரமானவை அல்ல. வலைகள் மிக மோசமானவை. எங்களின் தலையில் கணக்குக் காட்டுகிறார்களே தவிர, எங்களுக்கு எதுவும் உதவக்கூடிய மாதிரி இல்லை' என்று குமுறினார்கள் இருவர்.
விசாரித்தால், தங்களுக்குக் காண்பித்த வள்ளங்களும் வலைகளும் வேறு. இப்பொழுது கிடைத்திருப்பது வேறு என்றார்கள்.
ஆனால், என்ன செய்ய முடியும்? இதைப் பற்றிக் கேள்வி கேட்டால், 'வாயை வைச்சுக் கொண்டு சும்மா இருங்கள்.
அவங்கள் தாறதையும் நிற்பாட்டிப்போடுவாங்கள்' என்று இந்த உதவிகளை வாங்குவோரில் சிலரே அடக்கி விடுவார்கள்.
'உங்களுக்கு இதுகளை எல்லாம் தாறதுக்காக நாங்கள் எவ்வளவு கஸ்ரப்பட்டிருக்கிறம் எண்டு தெரியாமல் சும்மா குற்றம் குறை கண்டு பிடிச்சுக் கொண்டிருக்கிறீங்கள். விருப்பமில்லாட்டில் விடுங்கள். நாங்கள் இதை இன்னொரு இடத்துக்குக் குடுப்பம். இல்லாவிட்டால், திருப்பி அனுப்புவோம்' என்று தொண்டாளர்களே எச்சரிப்பார்கள்.
இதொன்றும் ஆச்சரியமில்லை.
பெரும்பாலான தொண்டு நிறுவனங்களில் இப்படித்தான் நடக்கிறது. பெரும்பாலான இடங்களில் மக்களும் இப்படித்தான் இருக்கிறார்கள்.
ஏதோ இலவசமாகத் தருகிறார்கள். தருவது எதுவாக இருந்தாலும் அதை வாங்கிக் கொள்வோம். எதற்காக தேவையில்லாமல் வாயைத்திறந்து வம்பை விலைக்கு வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஆனால், தொண்டு நிறுவனங்கள் வழங்குகின்ற உதவிகள் எவையுமே இலவசமானவை அல்ல. அவற்றுக்காக பெருந்தொகை நிதி செலவழிக்கப்படுகிறது. செல்வந்த நாடுகள் அவற்றை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள நாடுகளுக்கு உதவியாக வழங்குகின்றன என்றால், அந்த நாடுகளின் வருமானத்திலிருந்து, அந்த நாடுகளில் உள்ள மக்களின் வரிப்பணத்திலிருந்தே அவையெல்லாம் கிடைக்கின்றன.
அந்த நாடுகள் எப்படிச் செல்வந்த நாடுகளாக உருவாகின, இன்னும் அவை எப்படிச் செல்வந்த நாடுகளாக உள்ளன என்ற வரலாற்றையும் உண்மை நிலையையும் ஆழமாக ஆராய்ந்தால் அதன் அடியில் எங்களுடைய இரத்தமும் எங்கள் முன்னோரின் வியர்வையும் எங்கள் தேசத்தின் வளமும் அங்கிருக்கும். அல்லது எங்களைப் போல இருக்கும் வேறு மண்டலங்களின் வரலாறு அதனுள்ளிருக்கும்.
ஆகவே, தொண்டு உதவிகள் என்பது ஏதோ புண்ணியத்தில் வழங்கப்படுவதில்லை. அவற்றை வாங்கித் தருவோர் கூட தங்கள் சொத்திலிருந்து தானம் செய்வதில்லை.
அவர்களுக்குக் கவர்ச்சிகரமான சம்பளமும் உயர் வசதிகளும் உண்டு. அதையெல்லாம் அனுபவித்துக்கொண்டே இப்படி சனங்களில் வாயில் மண்ணை அள்ளிப் போடுகிறார்கள்.
இது எப்படி நடக்கிறது தெரியுமா?
முதலில் தரமான பொருட்களைக் காண்பித்து, ஒப்புதலைப் பெற்று உரிய இடங்களில் அனுமதியை எடுத்துவிடுகிறார்கள். பின்னர் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது தரமற்ற பொருட்களைக் கொள்வனவு செய்து பயனாளிகளுக்கு வழங்கி விடுகிறார்கள். இடையில் தாராளமாகச் சுருட்டிக் கொள்கிறார்கள். தாங்கள் சுருட்டிக் கொள்வதில் ஒரு தொகையை இதைக் கண்காணிக்கும் உத்தியோகத்தர்கள், அதிகாரிகளுக்கும் அளந்து விடுகிறார்கள்.
இது ஒரு பெரும் குறுக்கு வாணிபமாகவே வளர்ந்து விட்டது.
இதற்கெல்லாம் நாடு குழம்பியிருக்க வேண்டும். சீர் கெட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் தொண்டு நிறுவனங்களுக்கான வேலைகளும் இருக்கும். இவர்களுக்கா பிழைப்புகளும் இருக்கும். பல தொண்டு நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்து, தங்களின் பணி எல்லையைச் சுருக்கிக் கொண்டு வருவது பலருடைய வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.
ஆனால், ஒரு ஆறுதல். சனங்களின் வாயில் மண் அள்ளிப் போடப்படும் காரியங்கள் குறைந்து விடும்.
http://www.thenee.com/
- வடபுலத்தான்
வாயிலே
மண் அள்ளிப் போடுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பல சந்தர்ப்பங்களில்
உங்களுக்கே அந்த மாதிரி யாராவது மண்ணை அள்ளிப் போட்டிருப்பார்கள்.இதெல்லாம் மனுசன் செய்கிற காரியமா? என்று நீங்கள் கேட்கலாம். சந்தேகமில்லை. நிச்சயமாக இதை மனிதர்கள்தான் செய்கிறார்கள்.

No comments:
Post a Comment