Wednesday, 25 June 2014
முன்பள்ளி.
June 20.2014ம் திகதியன்று அனலை சமூகநல மன்றத்தினால் அனலைதீவு
முன்பள்ளிகளான அருணோதயா முன்பள்ளி, ஐயனார முன்பள்ளி, ஸ்ரீ பாலமுருகன் முன்பள்ளி, நாவலர் முன்பள்ளி ஆகியவற்றுக்கான கற்கை
உபகரணங்கள் வழங்கப்பட்டன.
June 20.2014ம் திகதியன்று அனலை சமூகநல மன்றத்தினால் அனலைதீவு
முன்பள்ளிகளான அருணோதயா முன்பள்ளி, ஐயனார் முன்பள்ளி, ஸ்ரீ பாலமுருகன் முன்பள்ளி, நாவலர் முன்பள்ளி ஆகியவற்றுக்கான 64000.00
ரூபா பெறுமதியான கற்கை உபகரணங்கள்
வழங்கப்பட்டன. இப்பணியினை நிறைவுசெய்ய உதவிய கிராம அலுவலர் திரு.வடிவழகையன், பிரதேசசபை முன்பள்ளிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்
திருமதி.பெனாண்டோ பாரதி, அனலைசமூகநல மன்ற
நிர்வாகிகள் மற்றும் நிகழ்வினைச் சிறப்பித்த திரு.நா.பத்தன் அவர்கள், திரு.நாகராசா அவர்கள், திரு இராமன் அவர்கள், ஆகிய அனைவருக்கும் எமது மனதார்ந்த நன்றிகளைத்
தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்பணிக்கான
உதவியை நல்கிய திரு.த.நாராயணன் அவர்களுக்கும் எமது
நன்றிகள்.
அனலை சமூகநல மன்றம்.
June 25.2014.
Sunday, 22 June 2014
Thursday, 19 June 2014
பக்திப்பாடல்கள்.
அனலைதீவு
அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி சமேத மகாவிஷ்ணு (வல்லியப்பர்) சுவாமி திருக்கோவில் பக்திப்பாடல்கள்.
சிறப்பாக எழுதி
இசையமைக்கப்பட்டுள்ள இப்பாடல்களை அனைவரும்
கேட்கவேண்டும் என்ற நோக்கோடு இப்பாடல்களை பதிவுசெய்யும் நாம் இப்பாடல்களை எழுதியவர்கள், இசையமைத்தவர்கள் மற்றும்
வெளியிட்டவர்களனைவருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்ளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும்
விபரங்களறிய திரு.க.மகாலிங்கம்(ஜேர்மனி) 49 23 321 3606 அவர்களின் தொலைபேசி இலக்கத்துடன்
தொடர்புகொள்ளலாம்.
அனலை சமூக நல
மன்றம்.Wednesday, 18 June 2014
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை வழிகாட்டி நூல் அறிமுகம்! |
18.06.2014 - புதன்கிழமை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் நலன் கருதி கல்வி அமைச்சு வினா விடைகள் அடங்கிய பரீட்சை வழிகாட்டி நூல் ஒன்றை நேற்று அறிமுகஞ் செய்து வைத்தது. கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க மற்றும் மேலதிகச் செயலாளர் ஹேமந்த பிரேமதிலக ஆகியோரும் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் அமைச்சரவையினதும் தீர்மானத்துக்கு அமைய இந்த நூல் வெளியிடப்பட்டதாகவும், அரசாங்க வெளியீட்டகத்தினால் தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலை 140 ரூபாவுக்கு மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இதேவேளை, க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கருத்தரங்குகளை நடத்துவதற்கு வசதியாக மாதிரி வினாக்கள் அடங்கிய இறுவெட்டுகளும் நேற்றைய தினம் கல்வி அமைச்சினால் விநியோகிக்கப்பட்டன. | http://www.epdpnews.com/ |
Monday, 16 June 2014
பக்திப்பாடல்கள்.
அனலைதீவு
அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி சமேத மகாவிஷ்ணு (வல்லியப்பர்) சுவாமி திருக்கோவில் பக்திப்பாடல்கள்.
சிறப்பாக எழுதி
இசையமைக்கப்பட்டுள்ள இப்பாடல்களை அனைவரும்
கேட்கவேண்டும் என்ற நோக்கோடு இப்பாடல்களை பதிவுசெய்யும் நாம் இப்பாடல்களை எழுதியவர்கள், இசையமைத்தவர்கள் மற்றும்
வெளியிட்டவர்களனைவருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்ளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும்
விபரங்களறிய திரு.க.மகாலிங்கம்(ஜேர்மனி) 49 23 321 3606 அவர்களின் தொலைபேசி இலக்கத்துடன்
தொடர்புகொள்ளலாம்.
அனலை சமூக நல
மன்றம்.
May 25.2014.
Saturday, 14 June 2014
Wednesday, 11 June 2014
அனலைதீவு மனோன்மணி அம்பாள் திருவிழாக்கோலங்கள்.
Subscribe to:
Posts (Atom)