Saturday, 11 October 2014

பச்சை முத்து.



மாம்பூவைப் பார்த்ததிலே
மனசெல்லாம் கனியாச்சு.
மாவிலையின் நடுவினிலே
உயிர் வழியும் நிலையாச்சு.
பச்சை நிறம் கண்ணுக்குள்ளே
சொட்டுச்சொட்டாய் ஊறிவரும்.
பார்வையுள்ள காலம்வரை - கண்ணிலே
கொட்டிவைக்க ஆசைவரும்.

பச்சை முத்தை மாமரத்து
பவளக் காம்பில் கட்டிவைச்ச
இயற்கையம்மா உன் எழிலே
இவ்வுலகின் அச்சாணி.

பூத்திருக்கும் மாமரம்போல்
மனிதா நீயும் சிரித்துவிடு.
பூமி முழுதும் ஓர் இனம்தான்
வெறும் பேதங்களை மறந்துவிடு.

                                          -சிவம்.
 




No comments:

Post a Comment