காலம் காலமாக நம் தொட்டிலைத் தாலாட்டும் கடலன்னை முடிந்தவரை முயற்சித்துச் சிலரைக் கரை சேர்த்தாள். முடியாத நிலையில் அறுபத்தியேழு பேரை தனது கருவறைக்குள் சேர்த்துக்கொண்டாள். நாட்டின் அசாதாரண சூழலுக்குள் அகப்பட்டு உயிர்நீத்த அத்தனை உறவுகளுக்காகவும் வருந்தும் நாம் 1990ம் ஆண்டு இன்றைய தினத்தில்(october.06.1990) கடலில் நிகழ்ந்த படகு விபத்தில் கடலன்னையின் அடிமடியில் உறங்கிப்போன நமது உறவுகளனைவருக்காகவும் உலகெங்கும் வாழும் அனலை மக்கள் அனைவரினதும் சார்பாக நமது நினைவஞ்சலியைச் செலுத்திக்கொள்வோம்.
அனலை சமூகநல மன்றம்.
October 06.2014..
படகின்
உருவத்தில் அனலை மக்களின் அழியாத்துயர்.
தினம் : 06.10.1990.
அலை அலையாக இருபத்தி நான்கு ஆண்டுகள் கரையடைந்து கடந்துசென்ற எமது அறுபத்தியேழு உறவுகளை எங்கள்
மன அலையில் நினைவுகொள்ளும் நீங்காத் தொடர் இதுவே.
கற்பனை அலைகளை
மூழ்கடித்துச் சென்றதை எப்படித் தாங்கும் உங்கள் உறவுகளின் இதய மலர்கள்?
தினம் தினம் வாடி
வாடியே மீழுதுவே அறிவீர்களோ யாம் அறியோம். உங்கள் ஆத்மா சாந்தி பெற வேண்டி தினம்
தினமாக ஐயன் பாதம் தொழுது இறைஞ்சுகின்றோம், பணிகின்றோம்.
ஓம் சாந்தி. ஓம் சாந்தி. ஓம் சாந்தி.
என்றென்றும்
விழிகளின் துளிகளுடன்
உங்கள் உறவுகள்.
அனலை மக்கள்.
October 06.2014.
இந்த இறங்குதுறை
சம்மாந்தறை துறை எனஅழைக்கப்பட்டது. இன்று
இராமர்
வாய்க்கால் என வழக்கில் சொல்லாடப்படுகிறது.இந்த ஒற்றையடிப்பாதையிலேதான் இருபத்திநான்கு
ஆண்டுகளுக்கு முன்னர் கடல்கொண்ட உயிர்கள் கனவுகளோடு நடந்து படகேறின.
இந்த இறங்குதுறை
மாதாகோவில் இறங்குதுறை.இதன்வழியாகவும்
கடல்கொண்ட
உயிர்கள் கனவுகளோடு நடந்து படகேறின.
No comments:
Post a Comment