யாழ் அனலைதீவு
சதாசிவ மகா வித்தியாலயத்தில் 11ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி செல்வி.நவரெத்தினம்
கலைச்செல்வி அவர்கள் இந்து கலாச்சார அமைச்சினால் நடாத்தப்பட்ட இந்து சமய பொது அறிவுப்
பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் முதலாம் நிலையில் சித்தியடைந்துள்ளார்.
நமது ஊர் மாணவி
செல்வி.நவரெத்தினம் கலைச்செல்வி அவர்களின் சாதனையை மனதார நாமனைவரும் பாராட்டி
வாழ்த்துவோம். இச்சாதனைக்காக உழைத்த ஆசிரியர்களுக்கும், கற்பித்த ஆசிரியர் திரு.சி.துஷ்யந்தன் அவர்களுக்கும், மகாவித்தியாலய அதிபர்
திரு.நா.இராதாகிருஸ்ணன் அவர்களுக்கும் நமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்
தெரிவித்துக்கொள்வோம்.
No comments:
Post a Comment