Saturday, 25 October 2014

பணிகள்.



கேட்டுக் கொடுப்பது திருப்தி.
தேடிக்  கொடுப்பது தர்மம்.

அனலைதீவு அபிவிருத்திப்பணிகள்.

1. அருணோதயா முன்பள்ளியை முழுமையாகக் கட்டி முடித்தல்.
2.அனலைதீவிலுள்ள எல்லா முன்பள்ளி ஆசிரியர்களுக்கும்  நியாயமான  கொடுப்பனவை உறுதிசெய்தல்.
3.வடக்கு சனசமூக நிலையம் முழுமையாகக் புனரமைக்கப்பட்டு  நடாத்தப்பட வேண்டும்.
4. சிறு கைத்தொழில் முயற்சிகளுக்கு உதவுதல்.
(பனம் பொருள் உற்பத்தி. தென்னம் பொருள் உற்பத்தி)
5. மரநடுகை.
6. திட்டமிட்ட பாதுகாப்பான பனை  நடுகை.
7. குளங்கள் புனரமைத்தல்.
8. மீன்பிடித்துறையில் தேவையானவர்களுக்கு உரிய முறையில் உதவுதல்.
கடற்கரைகளை தூய்மையாக பராமரித்தல்;(பிளாஸ்டிக் பொருட்களை கரைகளிலிருந்து அகற்றி மக்களுக்கு விழிப்புணர்வளித்தல்.
9. தையல் பயிற்சி நிலையமொன்றை அமைத்தல்.









ஊரிலுள்ள முன்பள்ளிகளில் அதிகமான குழந்தைகள் பயிலும் மன்பள்ளி அருணோதயா முன்பள்ளியாகும். அதற்காகக் கட்டப்பட்ட இக்கட்டிடம் பல ஆண்டுகளாக முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத நிலை தொடர்கிறது. தற்போது யன்னல்கள் சில அமைக்குமளவிற்கு கடடப்பட்டிருக்கிறது.தொடர்ந்து அக்கட்டிடம் கட்டப்பட்டு முழுமையடைந்தால் குழந்தைகளின் கல்வியில் விளக்கேற்றிய நிறைவு வாழ்வுமுழுதும் தொடரும்.
இப்பணியை மனமுவந்து  நிறைவேற்றித்தந்துதவுமாறு ஊர்மக்களனைவரினதும் சார்பாக  மனம் படைத்தவர்களனைவரிடமும் பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்

அனலை சமூகநல மன்றம்.
October 25.2014.




No comments:

Post a Comment