Friday, 19 December 2014

ஐயன் எழில் தோன்றுதையா.



ஐயன் எழில் தோன்றுதையா.

உதயப் பொழுதின் விம்பத்தில் ஐயன் எழில் தோன்றுதையா
பிறைமதியின் வடிவினிலே ஐயன் எழில் தோன்றுதையா
இரவின் நட்சத்திர ஒளியிலே ஐயன் எழில் தோன்றுதையா
கார்மேக கூட்டத்தின் அசைவிலும் ஐயன் எழில் தோன்றுதையா
மண்ணின்மேல் நீர் குமிழிதனில் ஐயன் எழில் தோன்றுதையா
புல்லில் படர்ந்த பனித்துளியிலும் ஐயன் எழில் தோன்றுதையா
முற்றமதில் துளசி மாடத்திலும் ஐயன் எழில் தோன்றுதையா
ஏர் சுமக்கும் காளை முகத்தினிலும் ஐயன் எழில் தோன்றுதையா
பசுமைப் பயிர் மணிகளிலும் ஐயன் எழில் தோன்றுதையா
வசந்த மலர்களின் இதழ்களிலும் ஐயன் எழில் தோன்றுதையா
பம்பை நதி நீரலைகளிலும் ஐயன் எழில் தோன்றுதையா
கரும்துளசி மாலை குஞ்சரத்திலும் ஐயன் எழில் தோன்றுதையா
சாமிகள் தாங்கிவரும் இருமுடிதனில் ஐயன் எழில் தோன்றுதையா
அடியவர்கள் இதயக்கமலத்திலும் ஐயன் எழில் தோன்றுதையா
 
பதினெட்டாம்படி அடையும்போது ஐயன் எழில் தோன்றுதையா
பசுவின் அபிஷேக நெய்யிலும் ஐயன் எழில் தோன்றுதையா
கமழ் புகுந்த சந்தணத்திலும் ஐயன் எழில் தோன்றுதையா
மனம் கவர்ந்த சாம்பிராணி தூபத்திலும் ஐயன் எழில் தோன்றுதையா
அலங்கார வடிவம் பூண்ட போதிலும் ஐயன் எழில் தோன்றுதையா
கற்பூர ஒளிதனிலும் ஐயன் எழில் தோன்றுதையா
பாய்ந்துவரும் புலியின் தோற்றமதிலும் ஐயன் எழில் தோன்றுதையா
காந்தார மலை மேட்டினிலும் ஐயன் எழில் தோன்றுதையா
அடியவர்க்கே பசி ஆற்றும் அமிழ்தினிலும் ஐயன் எழில் தோன்றுதையா
                     சபரிமலைவாசனே ஐயப்பா சரணம் சரணம் சரணம்.
                    சுவாமியே ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம்.
                   அரிகரன் சுதனே ஐயப்பா சரணம் சரணம் சரணம்.
                                                                                                                                -திரு.த.நாராயணன்.



No comments:

Post a Comment