Sunday 21 December 2014

நடுகை.

இந்த விருட்சங்கள் 1985ம் ஆண்டு அனலைதீவு மனோன்மணி அம்பாள் ஆலய அறங்காவல் சபை மற்றும் வழிபடுநர் சபை ஆகியவற்றின் அங்கத்தவர்களினால் நடப்பட்டவை. இப்பெரு விருட்சங்கள் கோடைகாலத்தில் பூமியில் நிழல் ஊற்றி நனைத்து நிமிர்ந்து நின்று இதமான நல்ல காற்றையும் ஊர்மக்களுக்கு வழங்கி இயற்கையைத் தூய்மைப்படுத்துகின்றன.கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்து விருட்சங்களாய் நிமிர்ந்துநிற்கும்  மருதமரம், அரசமரம், வில்வமரங்கள் மண்ணிலே நடப்படவேண்டும் என்ற நல்ல தூரநோக்கான சிந்தனையை நம் மனங்களிலும் நாம் நட்டுவைக்க இச்சிறு குறிப்பு உதவுமாயின் இன்னும் பல விருட்சங்கள் வளர்வதற்கு உரமாக அமையும்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இம்மரங்களை நட்டுவைத்த பெரியவர்களில் காலஞ்சென்ற திரு.வ.பரஞ்சோதி அவர்களும் ஒருவராவார் என்ற இப்பதிவின்மூலம் அன்னாரின் நினைவு விருட்சம்போல் உயர்ந்தது. இவ்விருட்சங்களைப் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்தவரை ஊரிலே ஒரு மரமேனும் நட்டுவைக்கவேண்டும் என்ற கட்டாயத்தை எல்லோர் மனதிலும் நட்டுவைக்கவே இப்பதிவையும் படங்களையும் பகிர்ந்துகொள்கிறோம்.
அனலை சமூகநல மன்றம்.
December 21.2014.



















No comments:

Post a Comment