Thursday, 9 April 2015

அனலைக் கோலங்கள்.



கடலுக்குள்ளே முத்தை வைத்தான்.
ஊரை
கடல்மேலே முத்தாய் வைத்தான்.

வாடக்காத்தும் சோளக்காத்தும்
வந்து பேசும் சொத்தாய் வைத்தான்.

மண்ணுக்குள்ளே பொன்னை வைத்து
மரம் பயிராய் விளைய வைத்தான்.

உச்சி வெய்யில் உள்ளே வைத்து
பச்சை நிறப் பாத்தி வைத்தான்.

நெஞ்சுக்குள்ள பாரம் வந்தா

ஊரை 
நெடுநேரம் பார்க்க வைத்தான்.
                                                                        -சிவம்



















No comments:

Post a Comment