கடல் தாண்டிச் செல்லும்
காற்றே
கரையை நீ வருடுகிறாய்.
கடலுக்குள் நீலம் ஊற்றி
கண்களையே திருடுகிறாய்.
ஊருக்குள் உன்னைத்தேடி
வயற்தோப்பு வாடுகிறாள்.
உழைத்துக் காய்த்த கைகளிலே
பழங்கொடுத்துப் பாடுகிறாள்.
நிலவொளியில் முகம் பார்க்க
முக்குளத்தைத் தேடுகிறாள்.
இரசிக்காத இயற்கை மகள்
வெட்டிவிட்ட தண்ணியைப்போல்
தரவையிலே ஓடுகிறாள்.
மனிதா நீ மாறிவிடு
இயற்கையிடம் கூடிவிடு
உனக்காகப் பூமி இல்லை
பூமியில் நீ ஓர் உயிரே. - சிவம்.
படம். திரு.க.உதயப்பிரகாஸ்.
எழுவைதீவு.
எழுவைதீவு.
எழுவைதீவு.
பருத்தீவு
பருத்தீவு
எழுவைதீவு. எழுவைதீவு.
எழுவைதீவு. எழுவைதீவு.
No comments:
Post a Comment