Monday, 13 April 2015

விநாயகனே.


தேரேறி வரும் விநாயகனே.
=========================
உதிக்கின்ற செங்கதிர் வேளைதனில்
பெரியபுலம் சங்கரனார் கணபதிக்கே
சங்காபிள்சேக தூப தீப ஆராதனைகள்
அலங்கார ரூப வடிவமானாய் நாயகனே
வேதபாராயண நாம கீர்தனைகள் தொடர
சிந்தைமகிழ பதிகம் ஓதுவார் ஓதிவர
இன்னிசை முழக்கங்கள் அதிர பரவசம் ஆட
அடியவர் புடைசூழ எழுந்தருளும்
நெஞ்சில் நிறை பஞ்ச முக விநாயகனே
தேரேறி பவனிவரும் முதல்வனே
அனலைத்தலம் வீற்று அடியவர்க்கு
அருளொளி பரப்பும் மூசுறு வாகனப் பிரியனே
தொந்திவயிறு மாணிக்கப் பிள்ளையாரே
பாதங்களில் வாடாமலர் சொரிந்து
பணிகின்றோம் எங்கள் பெருமானை
ஓம் கணேசா போற்றி போற்றி

= அறக்கடலாகிய கடவுளின் திருவடிகளைச்
சரணடைந்தாலன்றி பிறவிப் பெருங்கடலாகிய
பிறப்பிறப்பை நீந்துதல் அரிது =
= அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
   பிற வாழி நீந்தல் அரிது = குறள் =8
                                                                                 ,நாராயணன்



No comments:

Post a Comment