உப்புத்
தின்னாதவன்.
தோட்டவேலை, இராக்கொத்து,
விடியலுக்குள்
வீச்சவலை,
உப்புத் தண்ணிப் பொருக்கெல்லாம்
உடம்பெல்லாம்
பூத்திருந்த
உழைப்பாளி இராமர்
வந்து
வெள்ள மீசைக்
கீறு போட்டு
கன்னத்தில
வெட்டிவிட
முட்டிநின்ற
நினைவில் மனம்
முழுமையா
மூழ்கிப்போச்சு.
அறுகம்புல்லு
வேர் அரிக்க
அதில வந்த
மண்புழுவும்
வெட்டுப்பட்டுப்
போனாலும்
இரண்டு துண்டும்
வாழுதையா.
மண்ணுக்குள்ள
விளைவதெல்லாம்
வாய் விழுங்கி
மனித சாதி
குத்துப்பட்டுக்
குதறுப்பட்டு
மண்ணை மீண்டும்
குண்டு போட்டுக்
குதறுதய்யா. -சிவம்.
No comments:
Post a Comment