திரண்டு வரும் மழை மேகம்.
புகையும் மேகம் போன்று.
மேல்
நோக்கும் மழை மேகமே மழையாகும்.
புகைமேகம் கலைந்துவிடும்.
மழைநீரோ
மண்ணில் வேரைப்பற்றியே தளிர்வைத்
தந்து மகிழும்.
நல்லோர் மேகம் போன்று எப்போதும்
கீழ் நோக்கியே நற்பயன்களைச் செய்வர்.
மேனியில் தங்க நகை ஒளிர இறைவனின்
வாகனக் கொம்பில் தோள் தொடுக்கின்றான்
பக்தன்.
மேனி எங்கும் வியர்வைத் துளிகள் முத்தாக
ஏரின் பிடியில் கரங்களை அழுத்துகின்றான்
உழவன்.
சேலைமடிப்பு கலைந்து விடுமோ என
ஏங்குகின்றாள் பக்தை.
சேலை கிழிந்து விடுமோ என தவிக்கின்றாள்
வீதியின் ஓரத்தில் பெண்ணொருத்தி.
ஆலயத்தில் நிதி சொரிந்து தீபம் ஏந்தி முன்னிலை
வகிக்கின்றாள் பக்தை.
பிள்ளைக்கே கல்வி எனும் ஒளி ஏற்ற நிதி
இன்றி தவிக்கின்றாள் ஏழைத் தாயவள்.
த.நாராயணன்.
No comments:
Post a Comment