Wednesday, 12 August 2015

நிலம்.


வேர் என்று பெயர் சொல்லும்
விறகுகளும்
முளைப்பதாய்க் கிளைப்பதாய்க்
கனவு வர
விழுதென்று பெயர் சொல்லும்
பழுதுகளும்
வானத்தைச் சுமப்பதாய்
வார்த்தை தர
ஏமாந்தது என்னவோ
எல்லோரும்தான்.

அங்கிருந்து என்ன அனற்பார்வை?
 ஓ அடிமரத்துப் புது அரும்பா?
விலகி நில்லேன் விமர்சனம் உனக்கல்ல.

முளைப்பதற்கும்
கிளைப்பதற்கும் விருப்பென்றால்
அனுபவம் உறிஞ்சி
ஆழமாய் ஆழமாய்
அதனிலும் ஆழமாய்
நிலத்தையே நம்புவோம்.

நடக்கும்போதே
நிலம் மறந்த கால்கள்
ஊர் போய்ச்சேராது.
-சிவம்.

No comments:

Post a Comment