Wednesday, 6 January 2016

உள்வெளி.



அதியுச்ச தொழில்நுட்பம்
மூளையில்லாத மனிதர்களைக்
கோருகிறது.

பயன்படுத்த நேரமின்றி
மூளை  உறைகிறது.

உலக அதிசயங்களைத்
தேடிப் பார்க்கும் மனிதர்
ஒற்றை நிலவை
நிமிர்ந்து பார்க்க நேரமின்றி
கூன் விழுந்து
கறையாகினர்.

மாதக்கடைசியில்  பிறையாகி
சம்பள நாளில் முழுதாகியும்
இவர் வெளிச்சத்தில்
யாரோ ஒரு முதலாளி
ஏதோ ஒரு கடற்கரையில்
தனது நாட்டில் விளையாத
வாழைப்பழத்திற்கும்
பூக்களுக்கும்
விலை நிர்ணயிக்கிறான்.

மாசு இல்லாத மலைச்சாரல் காற்று
போத்தல்களில் ஏற்றுமதி செய்யும் நாட்டில்
ஆதிக்குடிகளின் குடிநீர்த் தேவைக்கு
சூடாக்கிக் குடிக்கும்படி
பணிப்புரையோடு
பனிக்கட்டியாகிக்
கிடக்கின்றன
பல
யதார்த்த  நதிகள்
சூரியனை நோக்கி.
                                        -சிவம்.

No comments:

Post a Comment