Tuesday, 16 August 2016

காத்திருக்கிறோம்.

மதிப்பற்குரியவர்களோடு:
அனலைதீவு மக்களின் வாழ்வாதாரா அடிப்படை வசதிகளுக்காக கடல் கடந்து பிரயாணம் செய்து வெய்யில் காலங்களில் கொதிக்கும் வெய்யிலில் வீடு வீடாகச் சென்று மழைநீர் சேகரிப்புத் திட்டங்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள், தொழில் வள அறிமுகப்படுத்தல்களும் வழிகாட்டல்களும், பயனற்றுபக்கிடக்கும் வளங்களைப் பயனுள்ளதாக மாற்றுவதற்கான முயற்சிகள் என நம் மக்களின்முன்னேற்றத்திலும் வளங்களிலும் அக்கறையான கிராமசேவையாளர்கள் திரு.தினேஸ்அவர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ரணேசன் அவர்கள் ஆகியோருக்கு ஊர்மக்களனைவரினதும் சார்பாக நமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.பிரதேச செயலர் திருமதி.எழிலரசி அன்ரன் யோகநாயகம் அவர்களின் அனலைதீவு மக்கள் மீதான மேலான அக்கறைக்கும், சேவைக்கும் ஊர்மக்களனைவரினதும் சார்பாக நமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ரணேசன் அவர்களை அவர்களின் சுற்றாடல் மீதான தார்மீகக்கோபத்துடன் கூடிய தனது படிப்பின்மூலம் இயற்கையின் புரிதலுடன் அனலைதிவு வளங்களினதும் மக்களினதும் அக்கறையோடும் கடின உழைப்புடனும் கூடிய சேவைக்காக ஊர்மக்களனைவரினதும் சார்பாக நமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.
தற்பொழுதுள்ள அரச அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் அனலைதீவு குடிநீர் பாதுகாப்பிற்காக மழைநீர்ச்சேகரரிப்புத் திட்டத்தின்கீழ் தொட்டிகள் வழங்கியும், நிலத்தடிநீரின் பாதுகாப்பிற்காக பயிற்செய்கையின்போது இரசாயன உரங்களைக் கணிசமான அளவு குறைத்து சேதனப்பசளைகளை உயயோகத்திற்கு மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டும் உள்ள நிலையில் குடிநீர்க்கிணறுகளிலிருந்து பவுசரில் நீர் உறிஞ்சும் முறையை தொடர்ந்து அனுமதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் நல்ல முடிவிற்காக.

No comments:

Post a Comment