Oct 09.2016ம் திகதி அனலைதீவு சிறிவேணி கல்வித்திண்ணையில் மாணவர்களால் கொண்டாடப்பட்ட சரஸ்வதிபூசையின் போதான படங்கள். நிகழ்வின்போது அடையாள முன்மாதிரியாக நெகிழிப் பைகள் தவிர்கப்பட்டு பனையோலைக் குண்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. அனலைதீவிலும் பிற இடங்களிலும் கவனிப்பாரற்று கைவிடப்பட்டுக் கிடக்கும் பனையின் வளங்கள் இந்தவகையிலான பயன்பாட்டை மீளக்கொண்டுவருவதன்மூலம் கைத்தொழில் வருவாய் அறிமுகப் படுத்தப்படவேண்டும். புகையிலைச் செய்கைத் தடைக்குப் பின்னர் இதுபோன்ற பனை, தென்னை, சங்கு, சிற்பி என்பவற்றினாலான கைவினைப்பொருட்களின் உற்பத்திக்கான பயிற்சியையும் அறிவையும் மக்கள் இப்போதிலிருந்தே பெற்றுக்கொள்ள முனைவது சிறப்பு.
No comments:
Post a Comment