Monday, 3 October 2016

பணிவோடு வேண்டுகிறோம்.

புகையிலைச் செய்கையை நிறுத்தும் அதே காரணத்திற்காக அனலைதீவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு ஏழைபாளைகளுக்கு விற்று அவர்களை ஒட்டாண்டியாக்கி அவர்களின் குடும்பங்களில் குற்றவாளிகளை உருவாக்கி சமூகத்தையே குட்டிச்சுவராக்கி குழந்தைகளின் கல்வியில் மண்ணைவாரிப்போடும் கள்ளு இறக்குமதி உடனடியாக நிறுத்தப்பட்டு குழந்தைகளின் கல்வியில் அக்கறையுடனான அனைத்து நடவடிக்கைகளும் அரச நிர்வாகத்தினரால் அனலைதீவில் மேற்கொள்ளப்படும் எல்லாவிதமான அபிவிருத்தி பணிகளுடனும் இணைத்து மேற்கொள்ளப்படுவதே
மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். அரச நிர்வாகம் அனலைதீவிற்கான கள்ளு இறக்குமதியை நிறுத்த தேவையான நடவடிக்கையை எடுக்கவெண்டுமென பணிவோடு வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment