பிறப்பு
:- 1934.June 05
இவர்
தனது கலைப் பயணத்தை 25 வயதில் (1975) ஆரம்பித்தார் அவர் நடித்த முதல்
நாடகமாக “காத்தவராஜன் கூத்து” ஆகும். இதில் இவர் ஏற்ற பாத்திரமாக
“பார்வதி அம்மன்ஃ தேவடியாள் ” ஆகும். மேடை ஏறிய ஆண்டுகள்
பின்வருமாறு
1. 1980 ஆண்டு – 2 வது நாடகம்
2. 1986 ஆண்டு – 3 வது நாடகம்
3. 1989 ஆண்டு – 4 வது நாடகம்
4. 1994 ஆண்டு – 5 வது நாடகம்
5. 1998 ஆண்டு – 6 வது நாடகம்
6. 2000 ஆண்டு – 7 வது நாடகம் (நயினாதீவில்
மேடையேற்றப்பட்டது)
7. 2008 ஆண்டு – 8 வது நாடகம்
மேலும் இவர் பாரம்பரிய கலைகளான
கிட்டியடி (கோலாட்டம்) கரகாட்டம் என்பனவற்றை தமே நெறிப்படுத்தி ஆலயங்களில்
அரங்கேற்றியுள்ளார். இவர் தனது கலைப்
பயணத்தில் தனக்கென சிறந்த இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார்
என்பதை குறிப்பிடதக்கது.
சின்னத்தம்பி
ஐயம்பிள்ளை
பிறப்பு
:- 1949.April.05
இவர்
தனது கலைப் பயணத்தை 24 வயதில் (1975) ஆரம்பித்தார் அவர் நடித்த முதல்
நாடகமாக “காத்தவராஜன் கூத்து” ஆகும். இதில் இவர் ஏற்ற பாத்திரமாக
“நடுக்காத்தான்” ஆகும்.
மேடை ஏறிய ஆண்டுகள் பின்வருமாறு
1. 1980 ஆண்டு – 2 வது நாடகம்
2. 1986 ஆண்டு – 3 வது நாடகம்
3. 1989 ஆண்டு – 4 வது நாடகம்
4. 1994 ஆண்டு – 5 வது நாடகம்
5. 1998 ஆண்டு – 6 வது நாடகம்
6. 2000 ஆண்டு – 7 வது நாடகம் (நயினாதீவில்
மேடையேற்றப்பட்டது)
7. 2008 ஆண்டு – 8 வது நாடகம்
மேலும் 1994ம் ஆண்டு சிறந்த
நடிகராக ஊர் மக்களினால் தங்கப்பதக்கம்
அணிவித்து கௌரவிக்கப்பட்டது. இவர் தனது கலைப்
பயணத்தில் தனக்கென சிறந்த இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார்
என்பதை குறிப்பிடதக்கது.
கௌரவிப்பு.
Oct. 14.2016ம் திகதி ஊர்காவற்துறை பிரதேச செயலகம், தீவகம் வடக்கு கலாச்சாரப் பேரவை இணைந்து நடாத்திய கலைஞர் கௌரவிப்பு வழாவில் அனலைதீவைச் சேர்ந்த பெருமதிப்பிற்குரிய கூத்துக்கலைஞர்கள் மதிப்பிற்குரிய சிந்துநடைக் கூத்துக் கலைஞர் திரு.நாகன் அந்தோனி அவர்களும் மதிப்பிற்குரிய சிந்துநடைக் கூத்துக் கலைஞர் திரு. சின்னத்தம்பி ஐயம்பிள்ளை அவர்களும் "கலை விழுது" பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இக்கலைஞர்களைக் கௌரவித்த ஊர்காவற்துறை பிரதேச செயலகம் தீவகம் வடக்கு கலாச்சாரப் பேரவை நிர்வாகத்தினரனைவருக்கும் நமது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு நமது மண்ணின் பெருமைமிக்க கலைஞர்களையும் பெருமையுடன் பாராட்டுவோம்.
படங்கள்:திரு.கோகுலன்.
No comments:
Post a Comment