Mar 06.2018ம் திகதி அனலைதீவு தெற்கு பாலமுருகன் முன்பள்ளி விளையாட்டு விழா நடைபெற்றது.
மகிழ்வோடு பங்குபற்றிய நமது மாணவச் செல்வங்களுக்கு மனதார வாழ்த்து தெரிவிப்போம்.
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வருகை தந்து சிறப்பித்த திருமதி. பாரதி (முன்பள்ளி இணைப்பாளர்)அவர்களுக்கு நமது ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். நிகழ்வினைச் சிறப்பித்த சிறப்பு விருந்தினர், கௌரவ விருந்தினர் மற்றும் பெற்றோர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். முன்பள்ளி ஆசிரியை செல்வி.தே.ரேணுகா அவர்களை பாராட்டி வாழ்த்துவோம்.
படங்கள்: திரு.த.கோகுலராஜ்.
-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.
No comments:
Post a Comment