பெருமதிப்பிற்குரியவர்களோடு!
அனலைதீவு
கலாசார ஒன்றியம் கனடா அமைப்பின் நிதானமான,
அதிமுக்கிய தேவைகளை அடையாளம் கண்டு பயணிக்கும் படிநிலை
வளர்ச்சிப் பாதையின் அடுத்தகட்டமாக கல்விச்சமூகத்தினாலும்,
பெற்றோர்களினாலும் முக்கிய வேண்டுகோளாக முன்வைக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கான நியாயமானதும், சாத்தியமானதுமான உதவித்தொகையை
அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா தொடர்ச்சியான, கிரமமான
கொடுப்பனவாக ஊர்மக்களின் ஒத்துழைப்போடும், ஆதரவோடும் ஏற்றுக்கொண்டு 2017ம் ஆண்டு மார்கழி
மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்துகிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
தூரநோக்கோடு
கூடிய நீண்டகாலப் பெறுபேறுகளை கருத்திற்கொண்டு பெறுப்பேற்றிருக்கும் முக்கியமான கல்விப்பணியில் பற்கேற்று தமது கல்வி வளர்ச்சிக்கு
உறுதுணையாக இருந்த, தாம் கல்வி கற்ற
பாடசாலைகளின் நினைவுகளை சுமந்து வெளிநாடுகளில் வாழும் ஊர்மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு பணிவோடு வேண்டுகிறோம்.
- அனலைதீவு
கலாசார ஒன்றியம் கனடா
No comments:
Post a Comment