அனலைதீவு வடக்கு மற்றும் மேற்குக் கரையோரப் பகுதியில் நவம்பர் 16.2020ம் திகதி
அமரர்களான திரு.ஐயன் இளையவன்
திருமதி நாகம்மா இளையவன் ஆகியோரின் ஞாபகார்த்தமாக திரு.கந்தன் மகாலிங்கம் அவர்களின் உதவியோடு இயற்கை ஆர்வமுள்ள இளைஞர்களால் விருட்சங்களின் விருத்திக்காக ஆலங்கொப்புகள் நாட்டப்பட்டன. இந்த நல்முயற்சியில் பங்குகொண்டு உழைத்த திரு.கந்தன் கிருஸ்ணன், ஆ.றொனாட், சொ.நிதுஷ்சன், யோ.சுரேந்தர், கோ.உதயராஜா,.ந.நந்தபாலன்,.ஜோ.அஜித்குமார்,
றொ.றெஜினோல்ட்,.த.துஜீபன்.,ந.சுஜந்தன்.,
த.துஜிபன்ராக்
க.உதயப்பிரகாஷ் ஆகியாருக்கு அனலை மக்களின் சார்பாக இயற்கை தோய்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
பல ஆண்டு காலமாக மரநடுகை பொதுவெளியில் தொடர்ந்து பேசுபொருளாக விதைக்கப்பட்டதன் விளைச்சல் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக அனலை இளைஞர்களால் முன்னெடுக்கப்படுகிறது.தனிமனித முயற்சிகளும் பயனுள்ளவகையில் தொடர்கின்றன. பூமி தன்னை மீளமைத்துக்கொள்கிறது.
எல்லோருடைய இயற்கை முயற்சிகள் யாவும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
நாட்டப்பட்ட ஆலங்கொப்புகளில் ஒரு மாத காலத்திற்கு பின் இயற்கை புன்னகைத்துள்ள படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment