சத்தமாகப் பேசுவதைவிட சத்தமில்லாமல் சபையைக் கேட்கவைப்பதுதான் இன்றைய சமூகத்தின் தேவை.
நம் எல்லோரினதும் உரித்தும், உரிமையுமான ஐயனார் கோவில்மீதான தொடர்பை தனி மனிதர் எவராலும் முடிவுசெய்யவோ அளவிடவோ முடியாது.
தவறுகளைத் தவிர்ப்பதற்கும், ஒற்றுமையைப் பேணுதற்கும் தொடர்ச்சியான முயற்சிகளை உறுதியோடு செய்யவேண்டிய தேவையை காலம் பணித்திருக்கிறது.
March.01.2024 ல் தெரிவுசெய்யப்பட்ட ஐயனார் கோவில் திருப்பணிச்சபை நிர்வாகத்தை அதன் தெரிவின் அடிப்படையில் நாம் முழுமையாக நிராகரிக்கிறோம் என்பதை உறுதியோடு பதிவுசெய்கிறோம்.
தற்போது வெளியிடப்பட்ட நிர்வாத்தெரிவு விபரங்கள் ஒரு கவசமாகவே தோற்றமளிக்கிறது.
பரஸ்பர விட்டுக்கொடுப்புகளின் அவசியத்தை உணர்ந்து தேவையான, முழுமையான, உறுதியான மாற்றங்களை
உள்வாங்கி ஐயனார் கோவில் திருப்பணிச்சபை நிர்வாகம் செழுமையுறுமானால் நாம் அந்த மாற்றங்களை மனதார வரவேற்கிறோம்.
அனலைதீவு ஐயனார் மரபியல் காப்பகம்- கனடா அமைப்பின் தொடர்ச்சியான வலியுறுத்தல்கள், கோரிக்கைகள் திருப்பணிச் சபையில் பிரதிபலித்திருப்பதை மனதார வரவேற்கிறொம்.
அந்த மாற்றங்களை நாம் தொடர்ந்து கோருகிறோம்.
முக்கியமான, விட்டுக்கொடுப்புகளுடன் சாத்தியமான, சாத்தியப்படுத்தப்படவேண்டிய நாம் கோருகின்ற மாற்றங்கள் கீழ்வருமாறு:
*இரண்டு தனித்துவமான அமைப்புகளில் தலைவர், பொருளாளர், செயலாளர் பதவிகளில் அதே நபர்கள் பதவி வகிப்பது நிர்வாக நடைமுறைகளில் “ஆதாய முரண்”, அதிகாரத் துஸ்பிரயோகம், மற்றும் நிர்வாகச் சீர்கேடு போன்றவற்றை உருவாக்குமென்பதால் தலைவர், பொருளாளர், செயலாளர் பதவிகளில் தகுதியுடைய, ஆலய நிர்வாகத்தில் இல்லாத நபர்கள் பதவி வகிக்கவேண்டுமென்பதை உறுதிப்படுத்துதல்.
*திருப்பணிச் சபை நிர்வாகத்தில் அதன் அத்திவாரமாக இயங்கும் வெளிநாட்டுப் பிரதிநிதித்துவம் அங்கீகரிக்ப்பட்டு அங்கத்தவர்கள் உள்வாங்கப்படல்.
*மாற்றங்களுக்கு உட்பட்டு உருவாகும் புதிய திருப்பணிச்சபை நிர்வாகம் ஒற்றுமை பேணி அனைவரையும் இணைத்து பொதுக் கலந்துரையாடல் ஒன்றை கனடாவில் நடாத்தல்.
மேற்குறிப்பிட்ட விடயங்களை இலகுவாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக திருப்பணி வேலைகள் துரிதமாகவும், உறுதியாகவும் நடைபெற எமது ஒத்துழைப்பு மானசீகமானது. பெருந் தொகையான நிதி முகாமைத்துவத்தில் நிர்வாகத்தவறுகள், “ஆதாய முரண்” நடந்துவிடக்கூடாது என்பதற்காக தனியான வேறொரு நிர்வாகமாக அமைக்கப்படும் நிர்வாகத்தில் அதே நபர்கள் அதே பதவிகளில் இருப்பார்களேயானால் புதிதான நிர்வாகத்தின் தோற்றத்தின் பயன்பாடு என்ன? என்ற கேள்விக்கான பதிலை உரியவர்களிடம் பொதுமக்கள் கேட்கவேண்டும்.
விரைவாகவும், உறுதியாகவும், நிறைவாகவும் எல்லாம் நடைபெறவேண்டுமென்று எல்லோரும்போல் நாமும் விரும்புகிறோம்.
- அனலைதீவு ஐயனார் மரபியல் காப்பகம்- கனடா
No comments:
Post a Comment