10000 ரூபா மாணவர் ஊக்குவிப்புத் தொகை!
முதற்கட்டமாக..
அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான ஊக்குவிப்புத் தொகை வழங்கல் திட்டம் ஒன்றை அனலைதீவு ஐயனார் மரபியல் காப்பகம்-கனடா அமைப்பபின் கல்வி மேம்பாட்டுப் பிரிவு 2024ம் ஆண்டின் சுப தொடக்கமாக Jan.01.2024ம் திகதி மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்தது.
March.13.2024ம் திகதி அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நிகழ்வின்போது பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்த அனலைதீவு ஐயனார் மரபியல் காப்பகம்-கனடா அமைப்பின் தலைவர் திரு.ஐ .இராசேந்திரம் அவர்கள் க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான ஊக்குவிப்புத் தொகையை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார். இச்செயற்திட்டத்தை நிறைவுசெய்ய ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலைச் சமூகத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.முன்னாள் அதிபர். திரு.நா.இராதாகிருஸ்ணன் அவர்களுக்கும் புதிய அதிபராகக் கடமையேற்றிருக்கும் திரு.து.புஸ்பகாந்தன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
24 மாணவர்களுக்கும் ஊக்குவிப்புத்தொகை வழங்கப்பட்டது.
மாணவர்களின் மேம்பாட்டில் அக்கறைகொண்டு நிதி உதவி வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
-அனலைதீவு ஐயனார் மரபியல் காப்பகம்-கனடா
No comments:
Post a Comment