அனலைதீவு ஆச்சி
துணை அருளகம் (ஜேர்மனி) தனது வருடாந்த கல்விசார் உதவியாக அனலைதீவு
மாணவர்களுக்கு ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான அப்பியாசக்கொப்பிகளை மாணவர்களுக்கு
வழங்கும் நிகழ்வு January 03.2014ம் திகதி அனலைதீவு மனோன்மணி அம்பாள் ஆலயத்தில்
நடைபெற்றது.
இவ்வுதவியை
வழங்கியவர்களான திருமதி.கிருபாஜினி மங்களேஸ்வரன், திருமதி.சிவாஜினி துஷ்யந்தன், திரு.த.நாராயணன் ஆகியோருக்கு அனலைதீவு
ஆச்சிதுணை அருளகம்(ஜேர்மனி)நம்மூரவர்களனைவரினதும் சார்பாக நன்றிகளைத்
தெரிவித்துக்கொள்கிறது.
இதுபோன்ற நிகழ்வுகளும்,
ஊரிலுள்ள மூத்தவர்களின் கௌரவிப்புகளும் தொடர்ந்து நடைபெறவும் மாணவர்களின்
கல்விநிலை உயரவும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
உரித்தாகட்டும்.
படங்களுக்கான நன்றி: திரு.Velupillai Nadesan



No comments:
Post a Comment