இப்பதிவைப் பகிர்வதன்மூலம் நீங்களும் மரங்கள் நடலாம்.
அனலைதீவு ஐயனார் கோவில் முன்றலில் உள்ள பூந்தோட்டக் காணிக்குள் திரு. தனிநாயகம் நாராயணன் அவர்களின் பங்களிப்புடன் செல்வி.நிலாயினி மகாலிங்கம் அவர்களின் முழுமையான முயற்சியோடும், உழைப்போடும் கமுகு மற்றும் பூக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகின்றன.வெளிநாடுகளிலிருந்து திருவிழாவிற்கு ஊருக்குப்போகும் ஊரவர்கள் இதுபோன்ற சின்னச்சின்ன முயற்சிகளை தாங்கள் விரும்பும் இடங்களில், கோவில்களில் முன்னெடுத்தால் ஊரின் ஞாபகங்களும், ஊரின் அழகும், இயற்கையும் சின்னதாய்ச் சிரிக்கக்கூடும். ஊருக்குப்போகும் ஞாபகமாக உங்கள் காணிகளில் பனை, தென்னை, வேம்பு, பலா, மா என ஏதாவது ஒன்றையேனும் நட்டு வளர்க்க முன்வாருங்கள். நடுவதால் மட்டும் பயனில்லை. அவற்றைப் பராமரித்து பாதுகாக்கும் பொறுப்பை குறைந்தது இரண்டு வருடங்களேனும் ஒருவரிடம் ஒப்படைத்து மரங்களை வளர்க்க முன்வாருங்கள். நமது ஞாபகங்கள்போல நமது ஊரும் அழகாக பூரிக்கும்.

படங்கள்: திரு.வை.தனேஸ்.

No comments:
Post a Comment