பொருக்குத் தண்ணி!
அனலைதீவு மக்களின் உயிர் ஆதாரமான பொருக்குத் தண்ணிக் கிணற்றிலிருந்து பவுசரில் மெசின் வைத்து நீர் உறிஞ்சும் நடைமுறையை ஊர்மக்களின் நன்மை கருதி தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ஊர்காவற்துறை பிரதேச சபை செயலாளர் தெரிவித்துள்ளார். குடிநீரைப் பாதுகாப்பதில் "தற்காலிகமாக" என்ற வார்த்தைக்கு இடமில்லை என்பதால் "நிரந்தரமாக" என்ற புரிதலோடு நாம் ஏற்றுக்கொண்டு 2014ம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் நாம் குடிநீரைப் பாதுகாக்க எடுத்த முயற்சிகளனைத்திலும் கரிசனையோடு பங்கு கொண்ட அனைவருக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.2014ம் ஆன்டு எமது கோரிக்கையை ஏற்று பொருக்குக் கிணற்றிலிருந்து தண்ணீர் உறிஞ்சும் அளவை பாதியாகக் குறைத்து அந்த குடிநீரைப் பாதுகாத்த பிரதேச செயலர் மதிப்பிற்குரிவரும் தண்ணீரின் அருமையை உணர்ந்தவருமாகிய திருமதி.எழிலரசி அன்ரன் யோகநாயகம் அவர்களுக்கு அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். குடிநீரைப் பாதுகாக்க புரிதலோடு எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஊர்காவற்துறை பிரதேச சபை நிர்வாகத்தினருக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். கரிசனையோடும் அக்கறையோடும் எமது கோரிக்கையைப் புரிந்துகொண்டு உதவிய மதிப்புக்குரிய திரு.டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் எமது நன்றினைத் தெரிவித்துக்கொள்கின்றோம். எம்மோடு தோளோடு தோள் நின்று ஒத்துழைப்பு வழங்கிய யாழ் அறக்கட்டளை நிறுவனம், சாலினி சாள்ஸ் ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.2014ம் ஆண்டிலிருந்து இன்று இந்த முடிவை எட்டும்வரை எமது கருத்துக்களையும் தேவைகளையும் புரிந்துகொண்டு உரையாடிய அத்தனை அரச அலுவலர்கள் கிராம சேவையாளர்கள் மற்றும் ஊரிலிருந்து உதவிய அனைவருக்கும்க்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

No comments:
Post a Comment