அங்கயிருந்து சும்மா தேவையில்லாத வேல பாத்துக்கொண்டு.....
எது தேலையில்லாத வேலை? ஆழ்கடல் சூழ்ந்த நம் மண்ணின்மீது இயற்கை அதிசயமாக ஊற்றிவைத்திருக்கும் அமிர்தமான குடிநீரை பவுசரில் மெசின் வைத்து உறிஞ்சி உப்புத் தண்ணியாகுவதற்கு முன்பாக அதைத் தடுத்து நிறுத்தி குடிநீரைப் பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு கொடுக்க நினைப்பது மிகத்தேவையான வேலை. அதைத் தொடர்ந்து செய்வோம்.
கடலுக்கு நடுவில் யாருக்கும் விக்கல் வரவேண்டாம்.
வளங்களைப் பாதுகாத்து இல்லாதவர்களுக்குப் பகிர்வதில் நாம் எப்போதும் சம்மதமுடையோம்.
வளங்களைப் பாழ் பண்ணுவதில் தார்மீகக்கோபம் உண்டு.
அது குடிநீரானாலும் சரி .
கடல்மீன் ஆனாலும் சரி.
அனலைதீவுத் தண்ணியோடும் அனலைதீவுப் பாணோடும் கடலில் கட்டுமரத்தில் உயிர் நனைத்து தொழிலுக்குப்போன வரம்கொண்டபூமியின் ஆசிர்வாதத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.
No comments:
Post a Comment