கோவில்களும் நிர்வாகங்களும்.
நிர்வாகம் தெரிவுசெய்வது அரசாங்கமோ, வெளிநாட்டுவாசிகளோ இல்லை. ஊர்மக்கள்தான் தெரிவுசெய்யவேண்டும்..
யாப்பு திருத்தம் செய்யப்படும்போது ஊரிலுள்ள அனுபவசாலிகளுடனும் வேறு கோவில் நிர்வாகங்களுடனும் அத்தோடு வெளிநாட்டிலுள்ளவர்களின் அபிப்பிராயங்களுடனும் கலந்தாலோசித்து தெளிவான நிலையை அடைந்தபின் முடிவுகளை எடுப்பதே சிறப்பு.
அடிப்படைக்காரணம் நிர்வகிக்கமுடியாத சொத்துவீக்கம்தானென்றால் .....
வருடாந்த செலவுக்கு மேற்பட்ட நிதியை ஊரின் அபிவிருத்திக்கும்இ வளர்ச்சிக்கும் பயன்படுத்தவேன்டுமென்ற முன்மொழிவை யாப்புத் திருத்தத்தின்போது முன்வையுங்கள்.
கல்விசார் உதவிகளைக் கட்டாயப்படுத்தி ஊர் பாடசாலைகளில் தேவைப்படும் தொண்டர் ஆசிரியர்களின் உதவித்தொகையை பொறுப்பேற்று தொடர்ந்து உதவுங்கள்.
பாடசாலைகளின் அவசியமான கட்டுமானங்களை நிறைவுபடுத்துங்கள்.
வெளியுர் ஆசிரியர்களின் நிலைமைகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கான நிரந்தர விடுதியொன்றைக் கட்டிக்கொடுங்கள்.
அன்னதான மண்டபத்தில் இலவச கல்வித்தானம் செய்யுங்கள்.
குளங்களை அகலப்படுத்தி மழைநீர் சேமியுங்கள்.
மழைகாலத்தில் கடலுக்குள் ஓடும் தண்ணீரைத் தடுத்து தரவையில் குளம்வெட்டிச் சேமித்து பயிற்செய்கைக்குத் திருப்புங்கள்.
கடலரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுங்கள்.
மரங்களை நட்டுப் பராமரியுங்கள்.
பனை வளங்களை அதியுச்ச பயன்பாட்டுக்குட்படுத்தி வறியவர்களின் வாழ்வை மேம்படுத்துவதோடு இயற்கையையும் போற்றுங்கள்.
பனை, தென்னை வளங்களினாலாகும் உள்ளுர் உற்பத்திகளை கொள்வனவுசெய்து வளங்களையும் இயற்கையையும் போற்றுங்கள்.
இற்றுப்போகக்கூடிய இயற்கைக் கழிவுகளை இயற்கை உரமாக்கும் இயந்திரங்களை கொள்வனவுசெய்து குப்பைகளற்ற நுளம்புகளின் பெருக்கத்தைக் குறைக்கக்கூடிய பொறிமுறைகளை நிர்வகியுங்கள்.
கோவில்களில் நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டை முற்றாகத் தடைசெய்து பனை உற்பத்திப் பொருட்களைப் பயன்படுத்துவன்மூலம் சூழலையும் இயற்கையையும் போற்றுங்கள்.
இவையெல்லாம் கோவில் நிர்வாகத்தின் வேலைகளில்லையென்றால் ஊர் மக்களால் தெரிவுசெய்யப்படும் நிர்வாகம் ஊர் மக்களுக்கும் ஊர் வளர்ச்சிக்கும் சேவை செய்யாமல் கடவுளுக்குத்தான் சேவைசெய்வதென்றால் அந்தச் சேவையை கடவுளரும் மக்களும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. சிவம்.
No comments:
Post a Comment