Saturday, 16 March 2024

புதிய அதிபர்.


 

 
அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள மதிப்பிற்குரிய அதிபர் திரு. துரைராஜா புஸ்பகாந்தன் அவர்களை அனலைதீவு மக்கள் அனைவரினதும் சார்பாக வாழ்த்தி வரவேற்கிறோம்.
பாடசாலையின் எதிர்காலம் செழிக்க மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த பாடசாலை நலன்விரும்பிகள் அனைவரையும் ஒன்றிணைத்து செயற்படவேண்டுமென்ற எதிர்பார்ப்போடு எம்மாலான கல்விசார்ந்த ஒத்துழைப்பை மனமுவந்து உறுதிசெய்கிறோம்.
தொண்டர் ஆசிரியராக கடமையைத் தொடங்கி 2013ம் ஆண்டிலிருந்து அதிபராகக் கடமையாற்றி மாணவர்களின் வளர்ச்சியில் நீண்டகாலமாக தனது பங்களிப்பை ஆற்றிய மதிப்பிற்குரிய அதிபர் திரு. நா.இராதாகிருஸ்ணன் அவர்களுக்கு அனலைதீவு மக்கள் அனைவரினதும் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மதிப்பிற்குரிய அதிபர் திரு.நா.இராதாகிருஸ்ணன் அவர்களின் வழிகாட்டலில் இதுவரைகாலமும் பணியாற்றிய அனைத்து ஆசிரியப்பெருந்தகைகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
-அனலைதீவு ஐயனார் மரபியல் காப்பகம்- கனடா

No comments:

Post a Comment